2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ நீதிமன்ற நிலை பற்றி உயர் நீதிமன்றுக்கு தெரிவிப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                                      (எஸ்.எஸ். செல்வநாயகம்)

இராணுவ நீதிமன்றத்தின் இன்றைய நிலை பற்றிக் கூறும் பத்திரங்களை சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ளார் என பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சஞ்சே ராஜரட்ணம் உயர்நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்தார்.

பிரதம நீதியரசர் அசோக டி.சில்வா நீதியரசர்களான கே.சிறிபவன், ஆர்.கே சுரேஷ் சந்திர ஆகியோர் கொண்ட குழு முன் ஒய்வு பெற்ற இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, தன்னை தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு வந்த போது பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சஞ்சே ராஜரட்ணம் இவ்வாறு கூறினார்.

24 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட பத்திரத்தில் சரத் பொன்சேகாவை விசாரிப்பதற்கான இராணுவ நீதிமன்றம் முடிவுக்கு வந்து விட்டதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

இராணுவ நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிகையில் காணப்பட்ட குற்றங்கள் அவ்வளவும் சரத் பொன்சேகாவால் இழைக்கப்பட்டுள்ளது என தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

ஒய்வு பெற்ற இராணுவ தளபதி அனோமா பொன்சேகா, சாமிலா பெரேரா ஆகியோர் சார்பில் ஸிப்லி அஸீஸ் ஆஜரானார். இவர் இந்த பத்திரத்தை தான் 27ஆம் திகதி காலை பெற்றுக் கொண்டதாக கூறினார். ஆனால் பொன்சேகாவிற்காக ஆஜரான ரொமேஷ் டி சில்வா தனக்கு இன்னும் அந்தப் பத்திரம் கிடைக்கவில்லை என்றார்.

இரு சட்டத்தரணிகளும் இப்பத்திரத்தை ஆராய கால அவகாசம் தேவை என கூறியதையடுத்து விசாரணை பெப்ரவரி 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--