Super User / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.பாரூக் தாஜுதீன்)
கிளைமோர் குண்டொன்றை பஸ்ஸில் வெடிக்கச் செய்து 65 பேரை கொன்றதாகவும் 75 பேரை காயம் அடையச் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபரை தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் துலணி அமரசிங்க பணித்துள்ளார்.
மகாலிங்கம் முத்துலிங்கம் எனற சந்தேக நபரை கடந்த பெப்ரவரி 2ஆம் திகதி கிளிநொச்சியில் வைத்து சேருநுவர பொலிஸார் கைது செய்தனர்.
இவர் கைது செய்யப்பட்ட முதல் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டர். விசாரணைகள் முடிவடைந்த பின்னர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் இவரை பூஸா முகாமில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றைக் கோரினர்.
அத்துடன், சந்தேக நபர் மீதுள்ள B 46440/10 இலக்க வழக்கு விசாரணைகளை காலி நீதிமன்றத்தில் மேற்கொள்ளுமாறு பூஸா முகாம் அதிகாரிகளுக்கு உத்தரவிடும் படி நீதிமன்றைக் கோரினர்.
நீதிபதி நவம்பர் 16ஆம் திகதி மேலதிக அறிக்கையை தாக்கல் செய்யும் படி பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு பணிப்புரை வழங்கினார்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026