2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் அழைப்பு குறித்து சம்பந்தன் நாடு திரும்பியவுடன் ஆராயப்படும்:மாவை

Super User   / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt(றிப்தி அலி)

தமிழ்க் கட்சிகளின் அரங்கின் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்வது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும் ஆராயப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜ தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்க் கட்சிகளின்  அரங்கின் கூட்டங்களில் கலந்து கொள்ளும் படி தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணியின் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார்.

எவ்வாறாயினும்  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும், தமிழ்க் கட்சிகள் அரங்கின் பிரதிநிதிகள் இரா.சம்பந்தனை நேரடியாக சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .