Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(காந்த்தய சேனநாயக்க)
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டமைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னனியினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவரொட்டி பிரச்சார நடவடிக்கையை பல நகரங்களில் பொலிஸார் தடுத்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
ஹங்வெல்ல, அவிசாவளை, மஹரகம, பொரளை மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை பொலிஸார் கிழித்ததுடன் சுவரொட்டிகள மற்றும் முச்சக்கர வாகனமொன்றையும் பறிமுதல் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை சுவரொட்டி ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை கண்டித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி, அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப பொலிஸார் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago