Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
ஜனாதிபதியின் உத்தரவு வரும் வரை கொழும்பு மாநகர மேயரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து தான் வெளியேறப் போவதில்லை என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் உவைஸ் முஹம்மட் இம்தியாஸ் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பு மாநகர மேயரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறாமல் தொடர்ந்து வசித்து வரும் முன்னாள் மேயர் உவைஸ் முஹம்மட் இம்தியாஸிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கொழும்பு மாநகர விசேட ஆணையாளர் ஒமர் காமில் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த முன்னாள் மேயர் இம்தியாஸ், கடந்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து தனது வீட்டுப் பிரச்சினை தொடர்பாக தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
"வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக எனக்கு வீடொன்றை விரைவில் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் வாக்குரியளித்ததுடன், எனக்கு வீடொன்றை வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி அமைச்சர் விமல் விரவன்சவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வீடமைப்பு அதிகார சபையினால் வீடு வழங்கும் வரை மேயர் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருக்குமாறு ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேயர் வாசஸ்தலத்திலிருந்து வெளியேறும் படி உத்தரவிடும் வரை, நான் வெளியேறமாட்டேன்" என்றார் முன்னாள் மேயர் இம்தியாஸ்.
நான் மேயர் வாசஸ்தலத்தில் வசித்து வருவதனால் மின் மற்றும் நீர் கட்டணம் மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எனினும் மேயர் வாசஸ்தலத்தில் நான் வசித்தாலும் வசிக்காவிட்டாலும் மின் மற்றும் நீர் கட்டணங்கள் செலுத்தப்பட்டே ஆக வேண்டும் என அவர் கூறினார்.
இது தொடர்பாக கொழும்பு மாநகர சபையின் விசேட ஆணையாளர் ஒமர் காமிலை தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்பு கொண்டு வினவிய போது,
"கடந்த ஜூன் மாதம் கொழும்பு மாநகர சபை கலைக்கப்பட்ட பிற்பாடு, மேயர் வாசஸ்தலத்திலிருந்து வெளியேறுமாறு முன்னாள் மேயர் இம்தியாஸிடம் தெரிவித்தோம்.
எனினும் அவர் வீட்டை விட்டு வெளியேற மூன்று மாத கால அவகாசம் கேட்டார். அதனையும் கொழும்பு மாநகர சபை வழங்கியது.
ஆனால் , மூன்று மாதம் கலந்தும் அவர் இன்று வரை கொழும்பு மேயர் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை விட்டு வெளியேறவில்லை.
இதனால் கொழும்பு மாநகர மேயர் வாசஸ்த்திற்கான நீர் மற்றும் மின்சார கட்டணத்தை செலுத்துவதை கொழும்பு மாநகர சபை நிறுத்தியுள்ளது" என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
6 hours ago