2021 மார்ச் 04, வியாழக்கிழமை

இலங்கைப் பணிப்பெண்களுக்கு சவூதி அரேபியா தடை? நாளை தீர்மானம் வெளியாகும்

Super User   / 2010 ஒக்டோபர் 09 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையர்களை வீட்டுப் பணிப்பெண்களாக சேர்ப்பதற்குத் தடை விதிக்கும் தீர்மானத்தை சவூதி அரேபிய அரசாங்கம் நாளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சவூதி அரேபிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பணிப்பெண்களுக்கான ஊதியம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இப்பகிஷ்கரிப்பு குறித்து அறிவிப்பதற்காக ஆட்சேர்ப்பு தொடர்பான சவூதி அரேபிய அரசாங்கக்குழு நாளை ஒன்றுகூடவுள்ளது. பணிப்பெண்களுக்கான ஊதியத்தை 7500 சவூதி றியால்களிலிருந்து 5500 றியால்களாக குறைப்பதற்கான சவூதி அரேபிய அரசாங்கத்தின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என சவூதி அரேபிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி,  அரேபிய மொழி நாளிதழான 'அல்யோம்' இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைத் தரப்பின் இணக்கமற்ற தன்மையானது சவூதி அரேபிய அரசாங்கக் குழுவின் அனைத்து உறுப்பினர்களிடையேயும் இவ்விடயத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தியுள்ளது. இப்போது அவர்கள் ஏனைய நாடுகளிலிருந்து பணிப்பெண்களை சேர்ப்பது குறித்து கலந்துரையாடுகின்றனர் என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .