2021 மார்ச் 01, திங்கட்கிழமை

இணையத்தளம் மூலம் பொலிஸில் முறைப்பாடுகள் செய்யும் வாய்ப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

இணையத்தளம் மூலம் பொலிஸ் முறைப்பாடுகள் பொலிஸில் முறைப்பாடு செய்ய விரும்பும் பொதுமக்கள் இணையத்தளம் மூலம் முறைப்பாடுகளை செய்வதற்கான திட்டமொன்றை பொலிஸ்  திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது.

www.police.lk என்ற இணையத்தளம் மூலம் ஒக்டோபர் 18 ஆம் திகதியிலிருந்து இம்முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளத்தில்  telligp@police.lk என்ற மின்னஞ்சலை தெரிவுசெய்து பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.

பொதுமக்கள் தமது பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் பொலிஸ் நிலையங்களில்  விசாரணைகளில் ஏற்படும் தாமதம் குறித்தும் அறிவிக்கலாம் என பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இம்முறைப்பாடுகள் தொடர்பாக இரு வாரங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கூறியுள்ளார்.
 


  Comments - 0

 • nuah Friday, 15 October 2010 10:10 PM

  119-தொலைபேசி மூலம் முறைப்பாட்டொன்றை செய்ய இயலுமாக இருப்பது போல் எஸ்.எம்.எஸ். குறுந்தகவல் மூலம் முறைப்பாடு செய்ய இயலுமாக இருக்க வேண்டும். எப்படியாக இருந்தாலும் மேலைநாடுகளை போல் வரமாட்டார்கள். இரவாக இருந்தாலும் மனநோயாளர் அவசர முறைப்பாட்டை தவறுதலாக செய்தால் கூட அவரை மனநல மருத்துவமனையில் சேர்க்க, பொய் முறைப்பாடுகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நவீன முறைகளும் செயலிழந்து விடும். என்ன தண்டனை கொடுக்கலாம், கசைஅடி கொடுக்கலாம், என்ன? சாட்சி இல்லை என்று கூறலாமல்லவா பிறகு வராமல் இருந்து!

  Reply : 0       0

  thilak Wednesday, 13 October 2010 05:11 PM

  வரவேற்கத்தக்க நடவடிக்கை

  Reply : 0       0

  Niththi Wednesday, 13 October 2010 05:54 PM

  பாதிக்கப்பட்டவர்களையே பொலிஸ் நிலையங்களில் குற்றவாளிகள் போல் பார்க்கும் நிலை இதன் மூலம் மாறும் என எதிர்பார்ப்பபோம்.

  Reply : 0       0

  farvez Wednesday, 13 October 2010 11:34 PM

  உண்மையாக பொலிஸ் ஸ்டேஷன் சென்று கம்ப்ளைன் பண்ணினால் கூட ஒன்னும் நடப்பதில்லை இதில் ஆன்லைன் கம்பளைன் ...... ரொம்ப கொமடியாக உள்ளது இ. இதுதாண்ட லங்கா பொலிஸ்.

  Reply : 0       0

  xlntgson Thursday, 14 October 2010 10:04 PM

  காவல்நிலையத்தில் போய் முறைப்பாடு செய்வது போல் அல்ல நேரடியாக மேலிடத்துக்கு முறையிடுவது போன்ற ஒன்றாக தெரிகிறது. எப்படி இருந்தாலும் கணணி யுகத்துக்குள் எல்லாத்துறையும் நுழையாமல் முடியாது. கணணி படித்திராதவர்கள் கணணியறிவு உடைய ஒருவரை கொண்டு முறைப்பாடு செய்ய இயலுமா என்று தெரியவில்லை. கணனிகளில் இந்த முறைப்பாடு கிடைத்த விபரம் தெரிந்து கொள்ளும் வசதி உண்டா? காவல்நிலைய கோப்புகளை திருத்தும் விளையாட்டு இங்கும் சுலபமாக நடக்கும். இதெல்லாம் நடைமுறைக்கு வர நாட்கள் பிடிக்கும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .