Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
இறுதி நேரத்தில் அரங்கம் மறுக்கப்பட்டதால், இன்றுமுதல் யாழ்ப்பாணத்தில் நடத்தவிருந்த 'சகோதரத்துவத்தின் திரைப்பட விழாவை' நடத்த முடியாத நிலை ஏற்பட்டதாக சோஷலிஸ இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சோசலிஸ இளைஞர் சங்கத்தின் செயலாளரும் மேல் மாகாண சபையின் முன்னாள் அங்கத்தவருமான எம்.மோகன் தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு கூறுகையில்,
'இன்று முதல் 16 ஆம் திகதிவரை யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் சகோதரத்துவத்தின் திரைப்பட விழாவை நடத்தவிருந்தோம். இத்தினங்களுக்காக மேற்படி மண்டபத்தை கடந்த மாதம் 22 ஆம் திகதி பதிவு செய்து அதற்கான கட்டணங்களையும் செலுத்தியிருந்தோம்.
இவ்விழாவை இன்று நடத்தும் நம்பிக்கையுடன் நாம் யாழ் வந்தபோதிலும் யாழ் மாநகர சபையின் தேவைக்காக நாவலர் மண்டபம் தேவைப்படுவதாகக் கூறி எமக்கு அம்மண்டபம் வழங்கப்படவில்லை. இதனால் இவ்விழாவை இன்று நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
குறித்த மண்டபத்தில் அங்கு எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை. வடக்கு தெற்கு மக்களிடையே புரிந்துணர்வையும் கலாசார விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கும்போது அதற்கு தடை விதிக்கப்படுகிறது.' என்றார்.
இது தொடர்பாக யாழ் மாநகர சபை செயலாளர் ரட்ணசிங்கத்திடம், தமிழ் மிரர் இணையத்தளம் தொடர்புகொண்ட போது, 'சோஸலிச இளைஞர் சங்கத்தின் சார்பில் செப்டெம்பர் 24 ஆம் திகதிக்கு இம்மண்டபம் பதிவு செய்யப்பட்டு பின்னர்ஒக்டோபர் 14 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது. ஆனால், யாழ் மாநகர சபை நிகழ்வொன்றுக்காக இம்மண்டபம் எமக்குத் தேவைப்பட்டது. இது குறித்து நேற்றே அவர்களுக்கு அறிவித்திருந்தோம்' என்றார்.
23 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago