2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கொக்கட்டிச்சோலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதியிடம் கோரிக்கை

Super User   / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

கொக்கட்டிச்சோலை, முனைக்ககாட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதுள்ள அமைதியான சூழலில் இவ்வாறான சம்பவங்களினால் மீண்டும் அச்சமான சூழல் ஏற்படக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த தமிழ் இளைஞர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .