2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

அடுத்த சுதந்திரத்தின விழா கதிர்காமத்தில்

Super User   / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இலங்கையின் அடுத்த சுதந்திரத் தின விழாவை மொனராகலை மாவட்டத்தின் கதிர்காமத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மொனராகலையில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டில் சுதந்திரத்தின விழாவுடன் தொடர்புடைய சகல கொண்டாட்டங்களும் மொனராகலை மாவட்டத்தில் நடத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இதன்படி, கதிர்காமர் ராஜவீதியில் சுதந்திரத்தின அணிவகுப்புகள் நடைபெறும். சுதந்திரத் தினத்தையொட்டிய தேசத்திற்கு மகுடம் கண்காட்சி மொனராகலை மாவட்டத்தின் புத்தளவில் 10 நாட்களுக்கு நடைபெறும்.

அதேவேளை 1500 கோடி செலவில் மொனராகலையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.  

குளங்கள், வீதிகள் வைத்தியசாலைகள் புரமைப்பு உட்பட பல அபிவிருத்தித்திட்டங்கள் சுதந்திரத்தினத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .