2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

வட மாகாணத்தில் தேர்தலை நடத்துவதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

வட மாகாணத்தில் தேர்தலை நடத்துவதன் மூலம் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் என இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்க பிரித்தானியா குழுவின் தலைவர் பவுல் முர்பி தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ  விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகளின் நாடளுமன்ற சங்கத்தின் பிரித்தானிய தூதுக்குழுவினர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கட்டிடத்தில் வைத்து சந்தித்தனர். இச்சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக கித்துல்கொடவும் கலந்து கொண்டிருந்தார்.

அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இளம் பல தமிழ் தலைவர்கள் உருவாக வேண்டும். அத்துடன் வட மாகாணம் சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அனைத்து மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இத்தூதுக்குழுவில் பிரித்தானிய நாடளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஒன்பது பேர் இலங்கை வந்துள்ளனர்.

இக்குழுவினர் இலங்கை நாடாளுமன்றம் தொடர்பான பல விளக்கங்களை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கேட்டறிந்து கொண்டனர்.

அத்துடன் இத்தூதுக்குழுவில் அங்கம் வகிக்கும் பிரித்தானிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கையில் பெண் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .