2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சட்டத்தை மாற்ற முடிவு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஷராபத் அமீர்)

1974ஆம் ஆண்டு 2ஆம் இலக்கம் கொண்ட தேசிய நீர் வழங்கல் வடிகாடமைப்பு சபை சட்டத்தை மாற்றியமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தற்போதைய முறைக்கு ஏற்றவாறு மேற்படி சட்டத்தினைத் திருத்தியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

நாவலை பகுதியில் அமைந்துள்ள நீர் வழங்கல் வடிகாடமைப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

1974ஆம் ஆண்டு 2ஆம் இலக்கம் கொண்ட சட்டக்கோவையின் ளிட பகுதிகள் தற்போதைக்கு ஏற்றதாக இல்லையென்றும் மின்சாரசபை சட்டத்துக்கு ஒத்ததாக திருத்தியரமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

புதிதாக உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கயள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த மாதம் அது அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் ஏ.அபேகுணசேகர, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கருணாசேன ஹெட்டியாரச்சி உட்பட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .