2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

த.தே.கூட்டமைப்புக்கு மீண்டும் அழைப்பு விடுக்க தமிழ் கட்சிகளின் அரங்கம் தீர்மானம்

Super User   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தற்போது நாடு திரும்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை அடுத்த வாரமளவில் தமிழ் கட்சிகளின் அரங்க பிரதிநிதிகள் சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் அடுத்த கூட்டம் இம்மாதம் 30ஆம் திகதி ஈ.பி.டி.பியின் கொழும்பு அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கு பொதுவான தீர்வொன்றை முன்வைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.

ஈ.பி.டி.பி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய விடுதலை முன்னணி, புளொட், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மாநாபா அணி, டெலோ ஆகிய கட்சிகள் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கின்றன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .