2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

நாடு தழுவிய ரீதியில் தாதியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நாளை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து தாதி உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையொன்று நாளை திங்கட்கிழமை நாடு தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ளதாக அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் உபதலைவரும் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளருமான பி.எம். நசுர்தீன் தெரிவித்தார்.

அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை காலை 8.00 மணி முதல் 11.00 மணிவரை இந்த வேலைப் பகிஷ்கரிப்பு இடம்பெறவுள்ளது.

தாதியர்கள் 12 வருட சேவைக்காலத்தில் முதலாம் தரத்தைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தல் வேண்டும், வேலை நாட்கள் 06 ஆக இருப்பதை 05 ஆக குறைத்தல் வேண்டும், தாதியர்களின் மேலதிக சம்பளத்தை 240ஆல் பிரிப்பதை நிறுத்தி 180ஆல் பிரிக்க வேண்டும், தாதியர் யாப்புத் திருத்தத்தை உடனடியாக வெளியிட வேண்டும்  ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து  தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

நாளை நடத்தப்படும் தமது பகிஷ்கரிப்பு நடவடிக்கைக்குப் பின்னரும் அரசிடமிருந்து சாதகமான பதில்கள் தமக்குக் கிடைக்காதுவிடின், எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் சுகயீனப் போராட்டமொன்றை மேற்கொள்வதற்கு தமது சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் சங்கத்தின் உபதலைவர் நசுர்தீன் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--