2020 நவம்பர் 28, சனிக்கிழமை

றிசானாவிற்கு கருணை காட்டுமாறு கோரி ஜனாதிபதி சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு கடிதம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண்ணான றிசானா நபீக்கிற்கு கருணை காட்டுமாறு கோரி சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் குழந்தையொன்றை றிசானா நபீக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு மரண தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

றியாத்திலுள்ள உயர் நீதிமன்றத்தினால் றிசானா நபீக்கிற்கு மரண தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, இலங்கை அரசாங்கம் இராஜதந்திர மட்டத்திற்கு இவ்விவகாரத்தைக் கொண்டு சென்றது.

சவூதி அரேபியாவில் கடந்த 2005ஆம் ஆண்டு குழந்தையொன்றுக்கு போத்தல் மூலம் பால் பருக்கும்போது, குழந்தை இறந்த விவகாரத்தில் றிசானா குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். 
 


  Comments - 0

 • Rasmy Tuesday, 26 October 2010 04:16 PM

  நிர்க்கதிக்குள்ளாகி இருக்கும் தன்நாட்டு குடிமகனுக்கு ஒரு நாட்டின் தலைவர் செய்யும் உச்ச கட்ட உதவி என கருதுகிறேன். கருணை நபி பிறந்த மண்ணில் மன்னிப்பு எனும் பண்பை மறந்த மன்னர்களின் மனங்களை எண்ணி வெட்கப்படுகிறேன். வாழ்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!

  Reply : 0       0

  Smm. Nafar from Qatar Tuesday, 26 October 2010 04:21 PM

  நமது ஜனாதிபதி இவ்வாறு செய்வது பாராட்டதக்கது

  Reply : 0       0

  guru Tuesday, 26 October 2010 08:48 PM

  எவ்வளவு இலங்கை மக்களை சவுதியில் தொழிலுக்கு சென்றவர்களை சவுதியர்கள் துன்புறுத்தி கொன்றார்கள்.இதை கதைக்க சவுதியர்கள் ஆயத்தம் இல்லை.

  Reply : 0       0

  alga Wednesday, 27 October 2010 01:50 PM

  Good Job

  Reply : 0       0

  Amjath ULM Wednesday, 27 October 2010 07:05 PM

  இலங்கைவாழ் முஸ்லிம்கள் சார்பாக ஜனாதிபதி மகிந்தராஜபக்க்ஷவுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்....
  அம்ஜத்.

  Sincere Thanks to President Mahida Rajapaksha , on behalf of Sri Lankan Muslims.
  Amjath ULM

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .