2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

உலகக்கிண்ணப் புகழ் ஒக்டோபஸ் உயிரிழந்தது

Super User   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின்போது சரியான எதிர்வுகூறல்கள் பலவற்றினால் புகழ்பெற்ற, போல் எனும் ஒக்டோபஸ் விலங்கு உயிரிழந்துள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜேர்மனியின் ஒபர்ஹெஸன் கடல் உயிரினப்பூங்காவில் இந்த ஒக்டோபஸ் விலங்கு வசித்து வந்தது. இன்று காலை அவ்விலங்கு உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக மேற்படி நீரியில் பூங்கா விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒக்டோபஸுக்காக நினைவுச் சின்னமொன்றையும் நிர்மாணிக்கவுள்ளதாகவும் அப்பூங்கா அறிவித்துள்ளது.

உலகக்கிண்ண இறுதிப்போட்டி, அரையிறுதிப் போட்டிகள் உட்பட 8 முக்கிய போட்டிகளில் வெற்றிபெறும் அணி எது என்பதை போட்டிகளுக்கு முன்பாகவே மேற்படி ஒக்டோபஸ் சரியாக எதிர்வுகூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் தேசியக்கொடிகள் பொறிக்கப்பட்ட இரு கண்ணாடிப் பெட்டிகளில் வெற்றி பெறப்போகும் அணியின் கொடிபொறித்த பெட்டியை தனது தொட்டிக்குள் இறக்குவதன் மூலம் மேற்படி ஒக்டோபஸ் எதிர்வு கூறியது. இந்த எதிர்வுகூறல் செயற்பாடுகளை உலகெங்குமுள்ள பல தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .