2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

துபாயில் கோமாவிலுள்ள இலங்கையர் இனம் காணப்பட்டார்

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துபாயில் வாகன விபத்தொன்றில் சிக்கி, கோமா நிலையிலுள்ள இலங்கையர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

40 வயதான சஜீவ் சந்திரகுமாரி எனும் இந்நபர் முகாமைத்துவ மற்றும் சுத்திகரிப்பு நிறுவனமொன்றில் பணியாற்றியவர் எனவும் பின்னர், ஒரு வருடத்திற்கு மேலாக தொழிலின்றி இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுஜீவின் நெருங்கிய நண்பர் ஒருவர் 'எமிரேட்ஸ் 247' நியூஸுக்கு இது தொடர்பாக கூறுகையில், சஜீவின் மனைவியும் அதே நிறுவனமொன்றில் பணியாற்றியதாகவம் அவரின் மனைவி வழக்கு விவகாரமொன்றில் அல் ரஷீடியா நகர பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதையடுத்து சஜீவ் மன அழுத்தத்திற்குள்ளாகியிருந்தாகவும் தெரிவித்துள்ளார்

"மனைவியை விடுவிப்பதற்காக அவர் தனது கடவுச்சீட்டை ஒப்படைத்திருந்தார். அபராதத் தொகையை செலுத்த முடியாததால் அவர் கடவுச்சீட்டை மீளப்பெறவில்லை" என மேற்படி நண்பர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--