Super User / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(டியன் சில்வா)
ஐக்கிய நாடுகள் சபை தற்போதைய சர்வதேச சூழலுக்கு ஏற்ப தனது பெறுமானங்களை மீள்மதிப்பீடு செய்ய வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார். 65 ஆவது ஐ.நா. தின நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் பீரிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் பிரச்சினைகளின் தன்மையானது எவ்வாறு மாற்றமடைந்துள்ளது, அவை பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பன குறித்து அமைச்சர் பீரிஸ் விளக்கினார்.
மனித உரிமைகளில் பொருளாதாரப் பரிமாணத்தின் அவசியத்தை வலியுறுத்திய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், உலகிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் வாழ்வதற்கான உரிமை மாத்திரமல்லாமல் கல்வி, சுகாதாரம், சுற்றாடல், பொருளாதாரம் என்பனவற்றை சிறந்த முறையில் அடையக்கூடிய சிறந்த வாழ்க்கைக்கான உரிமை இருக்க வேண்டும் என்றார்.
இலங்கை கடந்த 15 வருடங்களில் வறுமையை 11 சதவீதத்தால் குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவற்றின் அடிப்படையில், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மானியங்களுக்கான நிறுத்தப்படாதிருப்பதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், மூன்றாம் உலக நாடுகளின் பொருட்களுக்கு அபிவிருத்தியடைந்த நாடுகளின் சந்தைகள் திறந்திருக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். Pix by :- Waruna Wanniarachchi


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .