Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 31 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
அநூராதபுரப் பகுதியில் ஒரு மில்லியன் பெறுமதியான தங்கமுலாம் பூசப்பட்ட நாணயங்களை விற்பனை செய்ய முயன்ற இருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி, மேற்படி சந்தேக நபர்கள் இருவரும் கேகாலைப் பிரதேசத்திலுள்ள வியாபாரியொருவருக்கு தங்கமுலாம் பூசப்பட்ட நாணயங்களை விற்பனை செய்ய முயன்றதாகவும் கூறினார். புதையல் தோண்டியதன் மூலமே இது கிடைக்கப் பெற்றுள்ளதென சந்தேக நபர்கள் கூறியதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இச்சந்தேக நபர்கள் எங்குள்ளனரென்பது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். மேற்படி சந்தேக நபர்கள் முகஹெலுப்பல்லம மற்றும் தெஹியத்தகண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
இவர்கள் கூறிய விடயம் குறித்து சந்தேகமடைந்த வியாபாரி, அநூராதரம் விசேட குற்றப்பிரிவிலுள்ள நண்பரொருவருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் மேர்வின் கருணாரட்னவின் உத்தரவுக்கமைய சம்பவ இடத்திற்கு குற்றப்பிரிவினர் சென்றுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் அநூராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அநூராதபுரம் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
53 minute ago
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025