Super User / 2010 ஒக்டோபர் 31 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(டியன் சில்வா)
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸில் சிலையொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
பிரான்ஸின் வடகிழக்கு பிராந்தியத்திலுள்ள லா கோர்னியூவ் நகரில் தமிழர்கள் குழுவொன்றினால் இச்சிலை நிர்மாணிக்கப்படவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் டெய்லி மிரருக்குத் தெரிவித்தன.
இலங்கைத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையானோர் வசிக்கும் இந்நகரில் மேற்படி சிலைக்கான அடிக்கல் ஏற்கெனவே நடப்பட்டுள்ளது.
தமிழ்ச்செல்வனின் மூன்றாவது வருட நினைவு தினத்தையொட்டி நிர்மாணிக்கப்படும் இச்சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மனி மற்றும் பிரான்ஸில் வசிக்கும் இலங்கையர்கள் பலர் பிரெஞ்சு ஜனாதிபதி நிகலஸ் சார்கோஸிக்கும் லார் கோர்னியூவ் நகர மேயருக்கும் தமது ஆட்சேப மனுக்களை அனுப்பியுள்ளதாகவும்; தெரிவிக்கப்படுகிறது.
2007 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சில் சு.ப.தமிழ்ச்செல்வன் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
11 minute ago
22 minute ago
2 hours ago
Saleem Monday, 01 November 2010 10:15 AM
இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இருக்க இடமும் இன்றி உண்ண உணவும் இன்றி பிறந்த மண்ணில் அவலப்படும் இந்த நேரத்தில் பிரான்செல் சமாதி கட்டும் தமிழ் பிறவிகளும் இந்த உலகில் இருக்கிறார்கள் என்று நம்ப முடியவில்லை.
Reply : 0 0
xlntgson Wednesday, 03 November 2010 08:55 PM
சிலைகளினால் பிரச்சினையே தவிர வேறில்லை.
இதை சமாதி என்று குறிப்பிடவும் இயலாது. இறந்தவர்களுக்கு மட்டுமல்லாது உயிரோடு இருப்பவர்களுக்கும் வைக்கின்றனர். சதாம்ஹுசைன் சிலைக்கு நடந்த கதி உங்களுக்கு தெரியும்.
சிலை வைப்பதனால் மரியாதை வரும் என்று எண்ணி அவமதிப்பே அதிகம்.
கண்ணகிக்கு சிலை வைத்து பல வருடங்களின் பின் ஜெயலலிதா 2-ம் முறை பதவிக்கு வந்து அதை ஜோசியத்தின் படி அபசகுனம் என்று அகற்றினார்.
சிலைகள் இப்போது சிற்ப கலையையும் காட்டவில்லை. பிளாஸ்டிக் வார்ப்புகள்!
பிரான்சில் இது ஒரு தனி நபரின் வீட்டில் வைக்கப்படுமாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
22 minute ago
2 hours ago