Super User / 2010 நவம்பர் 04 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(றிப்தி அலி)
அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதாக யாழ் மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் திருமதி இமெல்டா சுகுமார் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இங்கு தொடர்ந்து சாட்சியமளித்த இமெல்டா சுகுமார்,
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அவர்கள் மக்களோடு மக்களாக இருந்தார்கள். இதனால் இராணுவம் விடுதலைப் புலிகளையும் மக்களாக கருத வேண்டி ஏற்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அனுமதியின்றி அரச படையினரிடம் சரணடையச் சென்ற பொதுமக்களை புலிகள் சுட்டுக்கொன்றனர். ஆனால் இராணுவத்தினர் ஒரு போதும் சரணடைய வந்த மக்களை சுடவில்லை. இராணுவத்தினர் மக்களை சரணடையுமாறே கோரினார்கள்.
யுத்தத்தின் போது இராணுவத்தினர் மக்களுக்கள் நிறைய உதவிகளை மேற்கொண்டனர். அத்தியவசிய திணைக்களத்திடமிருந்து திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவுக்கு கப்பல் மூலம் பொருட்கள் அனுப்பப்பட்டன.
அப்போது கறுப்பு நிற வாகனமொன்றில் விடுதலைப் புலிகள் அக்கப்பலை காத்துக்கொண்டிருந்ததாக சிலர் என்னிடம் தெரிவித்தனர்.
அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட பொருட்களில் 80% மக்களை சென்றடைந்தன. ஏனைய 20% தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.
என்னுடன் முல்லைத்தீவில் வேலை செய்த அதிகாரிகள் இருவர் வெளிவிவகார அமைச்சின் பரீட்சை எழுதுவதற்காக கொழும்பு செல்ல வேண்டியிருந்தது. எனினும் கடைசி வரை அவர்களை கொழும்பு செல்ல விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை.
இது தொடர்பாக நான் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்தேன். எனினும் அவர்கள் இக்காரணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு சந்தர்ப்பத்தில் நான் கூட யுத்தத்தின் காரணமாக காயப்பட்டுள்ளேன். எனினும் அது சிறு காயம். அப்போது ஊடகவியலாள்ர்கள் யாரும் என்னை பார்க்க அனுமதிக்கவில்லை. அச்சந்தர்ப்பத்தில் நான் காயப்பட்ட போது சிவப்பு நிறச்சட்டை அணிந்திருந்தேன். இதனால் தூரத்தில் இருந்து என்னை கண்டவர்கள் நான் பாரிய காயத்திற்குள்ளானதாக தெரிவித்தனர்.
யுத்தத்தின் இறுதி வரை முல்லைத்தீவு வைத்தியசாலையில் நான்கு வைத்தியர்கள் அங்கு தொழிற்பட்டுக் கொண்டிருந்தனர். அவ்வைத்தியசாலையின் மூலம் ஏராளமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
யுத்தத்தின் போது மன்னார் கிளிநொச்சி பிரதேசங்களை சேர்ந்த மக்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கே வந்து சேர்ந்தனர். அச்சமயம் மிகவும் கஷ்டத்திற்கு மத்தியிலேயே நிர்வாகத்தை மேற்கொண்டேன்.
அரசாங்கம் மாத்திரமே உதவி செய்தது. அப்போது எந்தவொரு சர்வதேச தொண்டர் நிறுவனங்களும் முல்லைத்தீவில் இயங்கவில்லை. ஆனால் ஐ.சி.ஆர்.சி. மாத்திரம் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்ட மக்களில் 60% மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் 30% குடியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டார். (Pix By: Pradeep Dilrukshana)
.jpg)
.jpg)
.jpg)
23 minute ago
28 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
41 minute ago