Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 நவம்பர் 06 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, நீர்கொழும்பு, கண்டி, பதுளை, அநுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு சிறைச்சாலைகளிலும் மற்றும் பூசா தடுப்பு முகாமிலும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் குடும்பத்தவர்களை தம்முடன் தொடர்புகொள்ளும்படி மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது முழுப்பெயர், அடையாள அட்டை இலக்கம், கைது செய்யப்பட்ட திகதி, தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அல்லது முகாம், குடும்ப அங்கத்தவரது தொடர்பு விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை மக்கள் கண்காணிப்புக்குழு தபால் பெட்டி இலக்கம் 803 கொழும்பு அல்லது இல.72 பங்ஷால் வீதி, கொழும்பு-11 என்ற விலாசத்திற்கு அல்லது dpf@sltnet.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்படி மக்கள் கண்காணிப்புக்குழு அறிவித்துள்ளது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago