Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Super User / 2010 நவம்பர் 07 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்கு சவூதி அரேபியாவுக்கு செல்ல தயாராகவிருந்த 256 ஹஜ் யாத்திரீகர்கள் தற்போதுவரை கொழும்பு கலதாரி ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஹோட்டல் உயரதிகாரி ஒருவர் தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.
குறித்த ஹஜ் யாத்திரீகர்களை ஏற்றிச் செல்லும் சவூதி எயார் லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழிநுட்ப கோளாறு காரணமாகவே ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நேற்று அதிகாலை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக யாத்திரீகர்கள் மக்கா செல்வதற்காக அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றனர். எனினும் விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப பிரச்சினை காரணமாக மக்கா செல்லாமல் நேற்று மாலை முதல் கலதாரி ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து பொருட்களும் விமானத்தில் ஏற்றப்பட்ட நிலையில் யாத்திரிகர்கள் இஹ்ராம் உடையுடனே ஹேட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக ஹஜ் குழுவின் உறுப்பினர் அஸாத் சாலியுடன் தொடர்பு கொண்டு வினவியபோது,
இப்பிரச்சினை தொடர்பாக சவூதி எயார் லைன்ஸுடன் பேசியுள்ளதாகவும் இன்று மாலைக்குள் இவர்கள் சவூதி அரேபியா செல்வார்கள் என அவர் உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .