2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

நகர சபை குண்டு வெடிப்பு வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்டவர் தண்டனையை குறைக்குமாறு மனு

Super User   / 2010 நவம்பர் 08 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுசித ஆர்.பெர்னான்டோ)

கொழும்பு நகர சபை குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றத்தை ஏற்றுக்கொண்ட பின் 30 வருட கடுழீய சிறைத்தண்டனை விதிக்கப்படவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகமானது என மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

மகஸீன் சிறைச்சாலையில் தற்போதுள்ள குற்றவாளியான சக்திவேல் இலகேஸ்வரன் தனது வழக்கில் சட்ட மா அதிபரை பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவரது சட்டத்தரணியாக கலாநிதி ரஞ்சித் பெர்னாண்டோ ஆஜராகியுள்ளார்.

இந்த வழக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மீது தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி பற்றியதாகும்.

இவர் குற்றமிழைக்கப்பட்ட போது தனக்கு வயது 19 எனவும் அக்காலத்தில் பல இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு வன்முறையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், தான் வடக்கு கிழக்கிலிருந்து வெடிபொருளை கொழும்புக்குகொண்டு வந்த சாரதியாக பயன்படுத்தப்பட்டதாகவும் தான் குற்றத்தை ஒப்புக்கொண்டு அதிகாரிகளுக்கு ஒத்தாசை வழங்கியதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளர்.

இவற்றை கருத்திற்கொண்டு தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைக்குமாறு நீதிமன்றிடம் வேண்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--