Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 10 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணையுமாயின் அதில் மலையக மக்கள் முன்னணியும் இணையத் தயார் என அக்கட்சியின் தலைவி சாந்தினி சந்திரசேகரன் தெரிவித்தார்.
இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்தும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைவது தொடர்பில் எமது கட்சி இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் எதிர்காலத்தில் சாதகமன தீர்மானம் எடுப்போம் எனவும் தமிழ்க் கட்சிகள் என்று மாத்திரமல்லாமல் முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சு நடத்த தாங்கள் தயார் எனவும் அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் சந்திரசேகரனின் மறைவையடுத்து மலையக மக்கள் முண்ணியின் தலைவியாக சாந்தினி சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
22 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
40 minute ago