2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்ற ஞாபகார்த்த நிகழ்வு நாளை; ஜனாதிபதி பிரதம அதிதி

Super User   / 2010 நவம்பர் 12 , பி.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் 20 வருட ஞாபகார்த்த நிகழ்வு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார்.

இந்ஞாபகார்த்த நிகழ்வில் அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ றிசாட் பதியுதீன், இலங்கைக்கான இந்திய தூதுவர் ஆசோக் கே காந்தா, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பட்ரீசியா புட்டேனிஸ், ஐரோப்பிய ஆணைக்குழுவின் இலங்கைக்கான தூதுவர் பேர்னாட் சாவேஜ் ஆகியோர் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் கலாச்சார நிகழ்ச்சியும்  வட மாகாண முஸ்லிம்கள் தொடர்பான வீடியோ காட்சியும் அங்கு ஒளிபரப்பப்படவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .