Super User / 2010 நவம்பர் 13 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளின்போது செய்தி சேகரிப்பதற்கு பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு இலங்கை அராசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
'யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகள் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்கு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்குவதற்கு கடந்த புதன்கிழமை பாதுகாப்பு அமைச்சு மறுத்திருந்தது.
ஆனால், இப்போது இந்த ஆணைக்குழுவின் விசாரணை எங்கு நடந்தாலும் பி.சி.சி. செய்தி சேகரிக்கச் செல்லலாம் என இலங்கை ஜனாதிபதி பி.பி.சி.க்கு அறிவித்துள்ளார்' என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய மாதங்களில் வவுனியாவுக்கு அப்பால் வடக்கிற்குச் செல்வதற்கு பி.பி.சிக்கு பல தடவை அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தற்போது மேற்படி ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பான செய்திகளை சேகரிக்க முடிவதுபோல் தென்பட்டாலும் வடக்கிற்கான பொதுவான ஊடகப் பயணங்கள் தளர்த்தப்படுமா என்பது தெரியவில்லை எனவும் பி.பி.சி. குறிப்பிட்டுள்ளது.
4 minute ago
12 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
47 minute ago