2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

வெள்ளம் காரணமாக நாடாளுமன்ற உடைமைகளுக்கு பெருமளவு சேதம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 14 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நாடாளுமன்ற உடைமைகளுக்கு பெரும்  சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தின் குழு அறைகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற ஊழியர்கள் இன்றும் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒலி செயன்முறையும் தரை விரிப்புக்களும் வெள்ள நீரால் சேதமடைந்துள்ளதாக நாடாளுமன்ற அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அங்குள்ள கம்பளங்களை இனி பயன்படுத்த முடியாது எனவும் இவை மிகவும் பெறுமதியானவை என்றும் எனினும் இழப்புக்களின் பெறுமதி இதுவரையில் மதிப்பிடப்படவில்லை என்றும் மேற்படி அதிகாரி மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .