2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

குறுகொட ஓய மின்சாரத் திட்டத்தில் குறுக்கீடு செய்யாதிருக்க உத்தரவு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 14 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

குறுகொட ஓய மினி நீர்மின்சார செயற்றிட்டம் செயற்படுவதில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை குறுக்கீடு செய்யக்கூடாதென கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் கட்டளையொன்றை வழங்கியுள்ளது.

போறுக்கா பவர் லங்கா லிமிட்டெட் தாக்கல் செய்த வழக்கில் நவம்பர் 26 வரை செயற்படும் வகையில் நீதிபதி றோகினி வல்கம இந்தக் கட்டளையை வழங்கினார்.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை, கலிகமுவ பிரதேச செயலாளர், பிரதேசசபை, இலங்கை மின்சாரசபை ஆகிய நிறுவனங்களிலிருந்து தேவையான அங்கீகாரங்கள், அறிக்கைகள், சிபார்சுகள், அனுமதிகள் பெறப்பட்டே இந்த நிறுவனம் வர்த்தக நோக்கில் இந்த நீர்மின்சார செயற்றிட்டத்தை செயற்படுத்தியது என வழக்காலிக் கம்பனி மன்றில் எடுத்து விளக்கியது. மின்சார உற்பத்தியாக்கப்பட்டு சுமுகமாக இயங்கிக்கொண்டிருந்த நிலையில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் துர்நோக்குடன் மின் உற்பத்தியை நிறுத்தும்படி கட்டளை அனுப்பியுள்ளார் என கம்பனி தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, வழக்காலி கம்பனி மின் உற்பத்தி நிலையம் இயங்குவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை எந்த இடையூறும் விளைவிக்கக்கூடாதெனக் கூறும் நிரந்தர கட்டளையொன்றை நீதிமன்றத்திடம் கோரி மேற்படி கம்பனி வழக்குத் தாக்கல் செய்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--