2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

தண்ணீர் வாளியில் தவறி வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை மரணம்

Kogilavani   / 2010 நவம்பர் 16 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்ரன்,ஜிப்ரான்)

மட்டக்களப்பு, புதூர், கதிரவெளியில் ஒன்றரை வயது பெண் குழந்தையொன்று தண்ணீர் வாளியில் தவறி வீழ்ந்த நிலையில் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது .

நேற்று மாலை இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் நடராஜா தயாழினி என்றக் குழந்தையே இவ்வாறு உயிரழந்துள்ளதென்று தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோரின் கவனயீனமே இதற்குக் காரணமென கவலை தெரிவிக்கப்படும் அதேவேளை குழந்தையின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்த விசாரரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--