2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

பொன்சேகாவின் சிறைக்கூண்டு கூரை ஒழுகுகிறது - அனோமா

Super User   / 2010 நவம்பர் 17 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அடைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டில் கூரைவழியாக மழை நீர் ஒழுகியதால் வாளிகள் மூலம் அவர் மழைநீரை அகற்ற நேரிட்டதாக சரத் பொன்சோகாவின் பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

'அவரின் கூண்டிலுள்ள கூரைகளில் துவாரங்கள் காணப்படுவதால் மழை காரணமாக கூரை வழியாக மழை நீர் ஒழுகியதாக அவர் (பொன்சேகா) தெரிவித்தார். அவர் வாளிகள் மூலம் நீரை அகற்ற நேரிட்டது. பின்னர்  வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் அவருக்கு 5 வாளிகளை வழங்கினர்' என அனோமா பொன்சேகா டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

தனது கணவரின் மருத்துவ நிலைமை குறித்தும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறித்தும் சிறைச்சாலை அதிகாரிகள் தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும்  அனோமா பொன்கோ தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .