Kogilavani / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் பலர், அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் வாகனங்கள் சகிதம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அரசியல் வேலைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பெற்றோலிய வளத்துறை அமைச்சு தொடர்பான விவாதத்தின்போது இதனை தெரிவித்திருந்தார்.
' இவர்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சம்பளப் பட்டியலில் உள்ளனர். ஆனால், அவர்கள் ஸ்ரீல.சு.க. தலைமையலுவலகத்திற்கு அரசியல் வேலைகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனியாக வாகனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.' என அவர் தெரிவித்துள்ளார்.
' இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் 2002 -2004 ஆண்டு ஆட்சியின் போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கே திருப்பி அழைக்கப்பட்டனர். ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி ஆட்சி பீடமேறியபின் அவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சம்பளத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அண்மையில் பதவியுயர்வுகளும் வழங்கப்பட்டன' என அவர் மேலும் தெரிவித்தார்.
விஜித ஹேரத் எம்.பி. இவ்வாறு கூறும்போது பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவும் அங்கு இருந்தார். ஆனால் அவர் விஜித ஹேரத் எம்.பியின் கூற்றுக்கு பதிலலெதுவும்கூறவில்லை.
கடந்த வருடம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 4.8 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
8 minute ago
25 minute ago
31 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
25 minute ago
31 minute ago
59 minute ago