Menaka Mookandi / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதியுதவியளித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன மற்றும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்துமாறு இன்று இரகசிய பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய முன்னணியின் தலைவர் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினரே இரகசிய பொலிஸாரிடம் இந்த முறைப்பாட்டினை முன்வைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒக்ஸ்போர்ட் உரை இறுதி தருணத்தில் தடை செய்யப்பட்டமைக்கு மேற்படி இருவருமே பொறுப்பு கூற வெண்டும் என்று குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago