2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

தமிழ்க்கட்சிகளின் அரங்கத்திற்கு த.தே.கூட்டமைப்பு அழைப்பு ; சனிக்கிழமை மாலை பேச்சுவார்த்தை

Super User   / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றவருமாறு தமிழ்க்கட்சிகளின் அரங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, நேற்று தொலைபேசி மூலம் இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தமிழ் மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு இச்சந்திப்பு நடைபெறவுள்ளதாக சிவாஜிலிங்கம் கூறினார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமிழ்க் கட்சிகளின் பொதுவான நிலைப்பாடு, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஒருமித்த குரலில் குரல் கொடுத்தல் ஆகியன தொடர்பில் இச்சந்திப்பின்போது பேசுவதற்கு தமிழ்க் கட்சிகளின் அரங்கம் திட்டமிட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் கூறினார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றவருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ்க்கட்சிகளின் அரங்கம் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (RSR)

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--