2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

'சிவில் நீதிமன்றங்கள் நீதி பரிபாலனுத்துக்கானவை: இராணுவ நீதிமன்றம் இராணுவ ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்கான

Super User   / 2010 டிசெம்பர் 09 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எஸ். செல்வநாயகம்)

இராணுவ நீதிமன்றம் அரசியலமைப்பின் படி ஒரு நீதிமன்றமாகுமா என தீர்மானிப்பதற்கான உயர் நீதிமன்றத்திற்கான இன்றைய  அமர்வில் பிரதிவாதி ஒருவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அஸிஸ், சிவில் நீதிமன்றங்கள் நீதி பரிபாலனுத்துக்காக அமைந்தவை என்றும் இராணுவ நீதிமன்றம் இராணுவ ஒழுக்கக் கட்டுப்பாட்டு நிர்வகிப்பதற்காக அமைந்தவை எனவும் குறிப்பிட்டார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சார்பாக ஆஜரான சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, இராணுவ நீதிமன்றம், இராணுவத்தினரிடையே ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில், குறிப்பிட்ட ஒரு நபரை விசாரிப்பதற்காக உடனடி தேவை கருதி நிறுவப்பட்டவை என்றார்.

டிசெம்பர் 13 ஆம் திகதி வரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .