2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு

Super User   / 2010 டிசெம்பர் 11 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று இன்று சனிக்கிழமை காலை கொழும்பில் இடம்பெற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது சிறுபான்மையினர் தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரு கட்சிகளுக்கும் தொடர்ந்து பேச்சு நடத்துவது என இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பஷீர் சேகுதாவூத், எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா,  சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் டி.சுமந்திரன் ஆகியோர் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்திய சென்றுள்ளதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனான இன்றைய சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 18 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதற்கு முன்னர் இரு கட்சிகளுக்குமிடையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--