2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

கறிவேப்பிலை நியாயத்தை கொண்டுள்ள அரசை வீட்டுக்கு அனுப்புவோம் - ரணில்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கறிவேப்பிலை நியாயத்தை கொண்டுசெல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது பதவியேற்புக்கு முன்னர் அவரையும் அவரது அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்புவோம் என்று ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சிறிகொத்தாவில் நடைபெற்றுவரும் ஐ.தே.க.வின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றுகையில் கூறியதாவது,

'மக்களை தொடர்ந்தும் துன்பத்துக்குள் தள்ளிவரும் அரசாங்கத்துக்கு சவால் விட்டு வெற்றிகொள்ளும் தைரியம் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே உண்டு. அதனால் அரசாங்கத்தை மூட்டை முடிச்சுக்களுடன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

இத்தனைக் காலமும் கட்சிக்குள்ளும் மக்களுக்குள்ளும் நிலவி வந்த பிரச்சினைகளை மறந்து குறை நிறைகளை நிவர்த்தி செய்துகொண்டு கட்சியை முன் கொண்டு அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும். எமது கட்சியை பலமிக்கதாக்கி அரசாங்கத்தை வீழ்ச்சியடையச் செய்ய வேண்டும்.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சிக்குள் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் உருவாக்கப்படுதல் வேண்டும். அத்துடன் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அரசியலில் முன்னுரிமை வழங்க ஐக்கிய தேசிய கட்சி எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும' என்றார். (M.M)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .