Menaka Mookandi / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோல்வியென்ற படியினை பலமுறைத் தாண்டிவிட்டோம். இனிவரும் காலங்களில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தோல்வியென்ற பேச்சுக்கே இடமில்லை.
அதனால் எமது கட்சி இனி வரும் காலங்களில் வெற்றி நடை போடும் என்று கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இணைச் செயலாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் திருத்தப்பட்ட யாப்புக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்கான மாநாடு சிறிகொத்தாவில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜித் பிரேமதாச எம்.பி, "ஐக்கிய தேசிய கட்சியானது தற்போது வெற்றிச் சமூகத்தை உருவாக்கிக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த காலத் தோல்விகள் எதிர்காலத்தின் வெற்றிப் படிக்கற்களாகத் தோற்றமளிக்கும். அதற்கான காலம் மிக நெருங்கிவிட்டது.
அந்த வெற்றிப் பயணத்தை நோக்கி நாம் இன்று முதல் பயணிப்போம். அதற்காக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஆதரவாளர்கள், பொதுமக்கள் வரை அனைவரம் வெற்றி என்ற உறுதியினை மனதில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதனூடாக ஐக்கிய தேசிய கட்சியானது பதிய யுகத்தை நோக்கிப் பயணிக்கும்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார். (M.M)
32 minute ago
39 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
39 minute ago
2 hours ago
5 hours ago