2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விபரங்களை வெளியிட வேண்டும்: ஜ.தே.மு.

Super User   / 2010 டிசெம்பர் 12 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போனோரின் பெற்றோரிடம் அவர்களின் பிள்ளைகளை கண்டுபிடித்து தருவதாகக் கூறி வடக்கிலுள்ள சில குழுக்கள் பணம் வசூலித்து வருகின்றன. இதனால் சிறையில் அல்லது புனர்வாழ்வு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும் என ஜனநாயக தேசிய முன்னணி அரசாங்கத்தை இன்று வலியுறுத்தியுள்ளது.
 

பெற்றோர்கள் சிலரிடம் 5 லட்சம் ரூபா பணம் பெறப்பட்ட சம்பவங்களும் உள்ளதாக ஜ.தே.முன்னணியின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கூறினார். தமக்கு அரசாங்க உயர்மட்டத்தவர்கள் சிலருடன் தமக்கு தொடர்பிருப்பதாக இச்சக்திகள் கூறிக்கொள்வதாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.
 

"இது மிகவும் பாரதூரமான நிலையாகும். எனவே அனைத்து தமிழ்க் கைதிகளினதும் புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளோரினதும் விபரங்களை வெளியிடுமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இத்தகைய நபர்கள் சுமார் 8000 பேர்; உள்ளனர். தமது நன்மைக்காக நாட்டின் நலன்களுக்கு எதிராக செயற்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சக்திகள் இவ்விடயத்தை தமது தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும்" எனவும் எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--