2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

தமிழ்க்கட்சிகளின் அரங்கத்துடனான உபகுழுவிற்கு த.தே.கூட்டமைப்பின் சார்பில் மூவர் நியமனம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.சுகந்தினி)

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடன் ஒருமித்து செயற்படும் முகமாக 6 பேர் கொண்ட உபகுழுவை நியமிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 3 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்க் கட்சிகள் அரங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 3 பேர் கொண்ட உறுப்பினர்களும் தமிழ்க் கட்சிகள் அரங்கத்தின் சார்பில் 3 பேர் கொண்ட உறுப்பினர்களும் கொண்ட உபகுழுவொன்றை நியமித்து தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு ஒருமித்து செயற்படுவதாக தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .