2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

அமெரிக்க எம்.பிகளின் கோரிக்கை வேண்டப்படாதது: இலங்கை அரசாங்கம்

Super User   / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் கடைசிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை வேண்டப்படாத ஒன்றாகும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மூலம் வலுவான பொறிமுறையொன்றை நாம் கொண்டிருக்கிறோம்' என வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்புப் பிரிவுப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

"இந்த ஆணைக்குழு தனது இலக்கை அடைவதற்கு அவகாசம் வழங்கப்பட வேண்டுமென அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனே கூறியுள்ளார்" எனவும் பந்துல ஜயசேகர  தெரிவித்துள்ளார்.

 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிலாரி கிளின்டனுக்கு அனுப்பிய கடிதமொன்றில், "அரசாங்கத்தின் இந்த ஆணைக்குழு அடையும் எந்த முடிவும் ஐ.நா. ஆதரவுடனான சர்வதேச விசாரணையொன்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என உறுதியாக நம்புகிறோம்" எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--