2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயம்

Super User   / 2010 டிசெம்பர் 19 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டியில் சட்ட விரோத மதுபானம் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இடமொன்றை சுற்றி வளைப்பதற்காக காட்டுப் பகுதிக்கு  சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர்  துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகி கடும் காயங்களுடன் கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி கலகெதர பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சட்ட விரோத மதுபானம் தயாரிக்கும் இடம் ஒன்றினை சுற்றி வளைப்பதற்காக கலகெதர காட்டுப் பிரதேசத்துக்கு சென்ற போது, மிருகங்களை வேட்டையாடுவதற்காக கட்டப் பட்டிருந்த துப்பாக்கி ஒன்றின் மூலமே இவர் சூடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--