2026 ஜனவரி 26, திங்கட்கிழமை

பிரதி அமைச்சர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி

Freelancer   / 2026 ஜனவரி 26 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி, இனந்தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவதானமாக இருக்குமாறு பிரதி அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரதி அமைச்சரின் பிரதிநிதி எனப் பொய்யாகக் கூறிக்கொள்ளும் நபர் ஒருவர், பொதுமக்களிடம் நிதி உதவி கோருகிறார் எனவும்  தனிப்பட்ட தகவல்களைக் திரட்டுகிறார் என்றும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இத்தகைய போலியான கோரிக்கைகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடையாளம் தெரியாத நபர்களிடம் பணத்தையோ அல்லது இரகசியமான தனிப்பட்ட விபரங்களையோ பகிர வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.

இத்தகைய சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் கிடைத்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது உரிய அதிகாரிகளிடமோ முறையிடுமாறு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், இத்தகைய மோசடிகளில் இருந்து மற்றவர்களைப் பாதுகாப்பதற்காக இந்த எச்சரிக்கையை ஏனையோருடனும் பகிர்ந்து கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X