Freelancer / 2026 ஜனவரி 26 , மு.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
'சௌமிய தான யாத்திரை' திட்டத்தின் கீழ், பெருந்தோட்ட பகுதிகளுக்கு தற்போது விநியோகம் செய்யப்படவுள்ள உலர் உணவு பொருட்களை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் நேற்று (25) சென்று ஆய்வு செய்தார்.
பெருந்தோட்ட பகுதிகளில் ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 'சௌமிய தான யாத்திரை' திட்டத்தின் கீழ், இதுவரை 100 தொன்களுக்கும் அதிகமான உலர் உணவுப் பொருட்கள் வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்டு இன்னும் முழுமையாக மீளாத, இயல்பு நிலைக்கு திரும்பாத மக்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்த மனிதாபிமான முயற்சியில் தங்களுடன் இணைந்து நின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தனது இதயப்பூர்வமான நன்றிகளை செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். (a)

25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026