2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

வெங்காயம் இல்லாததால் இறக்குமதியாளர்கள் கண்ணீர்

Super User   / 2010 டிசெம்பர் 22 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

இந்தியாவில் வெங்காய விலை உயர்வடைந்துள்ளதால் வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதி செய்வதை இந்தியா இடைநிறுத்தியுள்ளது. இதனால் இலங்கைச் சந்தையில் பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தம்மை இனங்காட்ட விரும்பாத முன்னிலை இறக்குமதியாளர் ஒருவர் இது தொடர்பாக கூறுகையில்,

"ஜனவரி 15 ஆம் திகதிவரை வெங்காய ஏற்றுமதியை இந்தியா இடைநிறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக இலங்கைக்கு கப்பலில் அனுப்பப்படவிருந்த வெங்காய கொள்கலன்களை இந்திய அதிகாரிகள் வாபஸ் பெற்றுள்ளனர். இல்லாவிடின் நாம்  ஒரு தொகுதி வெங்காயத்தை இவ்வாரம் இறக்குமதி செய்திருக்க முடியும்" எனக் கூறினார்.


அதேவேளை, இந்திய அரசாங்கம் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக வெங்காய இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"சீனா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடியும். ஆனால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதகாலம் செல்லும். மறுபுறம் பாகிஸ்தானிலுள்ள விநியோகஸ்தர்களுக்கு தற்போது இலங்கைக்கு வெங்காயம் அனுப்புவதைவிட இந்திய சந்தைகளுக்கு அனுப்புவது லாபகரமானது. இத்தகைய சில நடைமுறை பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டுள்ளோம்" என அவர் மேலும்கூறினார்.
 


  Comments - 0

 • xlntgson Friday, 24 December 2010 09:26 PM

  இந்தியாவை வெறுக்கின்றவர்கள் இந்திய உணவுகளையும் வெறுக்கவேண்டும்!
  என்ன விலை கொடுத்தாலும் வாங்கி உறவினரை திருப்தி படுத்த வேண்டும் என்றால் எங்கே போவது?
  இப்போது இந்தியாவிலும் வெங்காய தட்டுப்பாடு தேர்தல் வருவதால் அதை இறக்குமதி செய்யப் போகின்றார்களாம். தேங்காய் இல்லாமல் சாப்பிட பழகிக்கொள்ள வேண்டும்! தேங்காய் சுவையூட்டி தேங்காய் எண்ணெய்யும் அவசியமில்லை என்கிறார்கள் மாற்றுப்பொருள் எண்ணெய்க்கு கண்டுபிடிப்பது தான் கடினம் தாவர எண்ணெய்களும் விலை கூடித்தான் இருக்கின்றன. வனஸ்பதி என்றும் டால்டா என்றும் பாம்ஆயில்

  Reply : 0       0

  xlntgson Saturday, 25 December 2010 09:43 PM

  புறக்கோட்டையில் மரக்கறிவிலை கூட காரணம் வெங்காயம் வராமையினாலாகும் இதை பதுக்கி வைக்க இயலாது. உண்மையில் இதன் விளைச்சல் குறையக்காரணம் என்ன என்று கண்டுபிடிக்கவேண்டும்.
  வெங்காயம்இல்லாவிட்டால் அதற்கு மாற்று இல்லை. லீக்ஸ் அதிகம் விளைவதும் இல்லை. வெங்காயம் விலை கூடினால் மற்ற காய்கள் விலை கூட காரணம் இல்லை?
  கிழங்குகளைக் கூட தின்ன வெங்காயத்துடன் சேர்த்தால் தான் இயலும் என்கிறார்கள்.
  வெங்காயம் ஜலதோஷம், காய்ச்சல், வைரஸ் தொற்றுக்கு நிவாரணியும் ஆகும்.
  salad-பச்சையாகவே தின்னக்கூடியவற்றில் இது ராணி, தலைமை வகிப்பதால்!

  Reply : 0       0

  Niththi Wednesday, 22 December 2010 09:08 PM

  கிளிநொச்சியில் இப்போது வெங்காயமில்லையா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--