Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 11 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மத்திய வங்கி, தான் வழங்கும் கடனுக்கான வட்டி வீதத்தை இன்று குறைத்துள்ளது. இது பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதற்கான ஒரு நடவடிக்கையென பொருளியலாளர்கள் தெரிவித்தனர்.
அரசாங்கம் முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கத்திலுள்ளதென பொருளியல் ஆய்வாளர் துஷத் டி சில்வா கூறினார்.
தனியார் துறையின் பங்குபற்றுதலை ஊக்குவித்தல் மிகவும் அவசியமானதென மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பணவீக்கம் குறைந்துள்ளதென மத்திய வங்கி கூறினாலும், சில குறிப்பிட்ட பொருட்களின் விலைகள் அதிகரித்ததை ஏற்றுக்கொள்கின்றது.
இலங்கையின் 2010ஆம் ஆண்டுக்கான பணவீக்க வீதம் 5.9 ஆகும். இலங்கை ரூபாயின் பெறுமதி உறுதியாக இருந்துள்ளது. இதனால் இறக்குமதிகளின் விலையேற்றத்தை சமாளிக்கக் கூடியதாக இருந்தது. (DM)
5 hours ago
7 hours ago
xlntgson Tuesday, 11 January 2011 09:04 PM
வட்டி % எத்தனையாக இருந்தால் என்ன?
அது விலைகளைக் கூட்டவே செய்யும்!
வட்டி இல்லாத பொருளாதாரத்தைப்பற்றி சிந்திக்க வேண்டும்!
நாணயமில்லாதவர்களை உருவாக்கும் வங்கிப்பொருளியல் 'நாணயம்' பற்றி பேசுமா?
திடீர் திடீர் என்று ஓர் அறிக்கையில் தனக்கு வேண்டியமாதிரி எல்லாம் ஒரு வியாபாரி கூட்டி குறைத்தால் அவனை யார் நம்புவார்கள், அவனை அந்த நிலைமைக்கு ஆக்கும் வங்கிகள் பொறுப்பேற்குமா?
இடைத்தரகர்களைப்பற்றியே பேசி காலத்தை வீணாக்குவோர் காலத்தை கணக்குப்பார்த்து காசாக்குவது வேடிக்கையே!
வங்கி & நிதி நிறுவனங்களே இடைத்தரகர்கள்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago