2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வெள்ளைக்கொடி வழக்கில் கொழும்பு முன்னாள் நீதவான் சாட்சியம்

Super User   / 2011 ஜனவரி 12 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பாரூக் தாஜுதீன்)

சரத் பொன்சேகா மற்றும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முன்னாள் கொழும்பு பிரதம நீதிபதி சம்பா ஜானகி ராஜரட்ன சாட்சியமளித்தார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுடனான பேட்டியின் குறிப்புக்களை பிரெட்ரிகா ஜேன்ஸ் பதிவு செய்திருந்த குறிப்பு புத்தகத்தை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்ட போது இருந்த மாதிரி இப்போது இல்லை என அவர் கூறினார்.

அதில் இரண்டு பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளன. கிழித்ததற்கான அடையாளமாக ஓர் அங்குல அகலமான கடதாசி மீதி உள்ளது என அவர் கூறினார்.

பிரெட்ரிகா ஜேன்ஸின் சட்டத்தரணி என்.எம்.சஹீட், சிரஸ செய்தி வாசிப்பாளர் ஓமாயா மடவெல விதானகே, புலனாய்வு பொலிஸ் பிரிவை சேர்ந்த டப்ளியூ.பி.எஸ்.ஐ.அபேரட்ன, உயர் நீதிமன்ற பதிவாளர் ஆகியோரும் சாட்சியமளித்தனர்.

குறித்த வழக்கு நாளை வியாழக்கிழமையும் தொடரவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--