Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 14 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாரூக் தாஜுதீன்)
இராணுவ நீதிமன்றம் அரசியலமைப்பின் படி ஓர் நீதிமன்றமா என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஹைகோப் வழக்கு விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ஒத்திவைத்துள்ளது.
இராணுவ நீதிமன்றம் ஹைகோப் வழக்கில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை குற்றவாளியாக கண்டு தண்டனையும் அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சரத் பொன்சேகா கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்தார்.
வழக்கு நடந்து கொண்டிருந்த போது மேல் நீதிமன்றம், இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் ஒரு நீதிமன்றமா? என தெளிவுபடுத்தும் படி உயர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது.
இது தொடர்பில் உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்காத நிலையில் சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி ஓர் ஆட்சேபனையை கிளப்பினார்.
இராணுவ நீதிமன்றம் ஒரு நீதிமன்றம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், சரத் பொன்சேகாவை ஒரு குற்றத்துக்கு எதிராக இரண்டு நீதிமன்றங்களில் விசாரித்ததாக முடியும்.
இது ஏற்புடையதல்ல. எனவே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை மேல் நீதிமன்றம் ஹைகோப் வழக்கை விசாரிப்பதை நிறுத்த வேண்டும் என வாதிட்டார்.
இதை கேட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை வழக்கை ஒத்திவைத்தார்.
5 hours ago
8 hours ago
19 Sep 2025
19 Sep 2025
siddeek Saturday, 15 January 2011 05:03 PM
உண்மையான தலைவன்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
19 Sep 2025
19 Sep 2025