2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இலவச சுகாதார கவனிப்பு வசதி ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 18 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுசைன்)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சுகாதார கவனிப்பு வசதிகளை பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை வரை நீடித்து வருவதாக சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்தது.

சுகாதார தேவைக்கான பொருட்களை விநியோகித்தல், சுகாதார பிரச்சினைகள் தொடர்பிலான விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துதல், இலவச வைத்திய முகாம் நடத்துதல், ஆகிய சேவைகள் குறித்த கூட்டமைப்பினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னப்பிரிய, 'இதுவரை நாமே இந்த சேவைகளுக்கான செலவுகளை பொறுப்பேற்றோம். ஆனால் பொதுமக்கள் எமக்கு உதவ விரும்பினால் எம்மிடம் நீர் போத்தல்கள், பற்பசை, பற்துரிகை, சுகாதார நாப்கின்கள், சவர்க்காரம், செருப்புகள் போன்றவற்றை கையளிக்கலாம்.

அவ்வாறு நிவாரணப் பொருட்களைக் கையளிக்க விரும்புபவர்கள், இலக்கம்:899½, மருதானை வீதி, புஞ்சிபொரளையில் அமைந்துள்ள தொழிற்சங்க அலுவலகத்தில் மு.ப.9.00 இலிருந்து பி.ப. 5.00 மணிவரையில் ஒப்படைக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வேறு சில நிறுவனங்களும் எமக்கு உதவியளிப்பதாக கூறியுள்ளன. அத்துடன் , வேலை கொள்வோர் சம்மேளனம் எமக்கு பொருட்களை வழங்கவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--