Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜனவரி 18 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் நுகர்வுப் பொருட்களுக்கான சில்லறை விலைகள் விளம்பரங்களில் குறிப்பிடப்படுவது அவசியம் என நுகர்வோர் அதிகார சபை இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் இவ்விதி அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுளள்து.
நுகர்வோர் அதிகார சபை சட்டத்தின் 10 (1) ஆம் பிரிவின் கீழ், பத்திரிகைகள். திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், கட்புல, மற்றும் செவிப்புல, இணைத்தள அல்லது ஏனைய அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்களில் விளம்பரப் படுத்தப்படும் விற்பனைப் பொருட்களின் தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவரும் தாம் விளம்பரம் செய்யும் பொருட்களின் சில்லறை விலையை அவ்விளம்பரங்களில் குறிப்பிடுவது அவசிமானதாகும் என மேற்படி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான அளவு, மாதிரி, வகை, தரம் கொண்ட பொருட்கள் விளம்பரப்படுத்தப்பட்டிருப்பின் அவற்றின் ஒவ்வொரு வகை பொருட்களின் விலைகளும் குறிப்பிடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
55 minute ago
1 hours ago